கலாநிதி ஏ. டி. ஆரியரத்ன ஒரு அரசாங்கத்தினது, கட்சியினது அல்லது அத்தகைய எந்தவிதமான அதிகாரமும் இல்லாமல் மனித சமுதாயத்தை ஒன்றிணைத்த தலைவர் - பிரதமர் தினேஷ் குணவர்தன

“மானிடப் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நற்பண்புமிக்க உன்னத இயக்கத்தை நாடு முழுவதும் செயற்படுத்திய கலாநிதி ஏ. டி. ஆரியரத்ன இலங்கைத் தாய் ஈன்றெடுத்த ஒரு உன்னதமான மனிதர்.

அவரது மறைவு முழு நாட்டுக்குமே பேரிழப்பாகும். நாடு முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று அவர் காட்டிய மகத்தான முன்னுதாரணம் என்றும் நிலைத்திருக்கும்.

பல தலைமுறைகளுடன் முன்னோக்கி கொண்டு வரப்பட்ட முன்மாதிரியான இந்த செயன்முறை இலங்கைக்கு மட்டுமன்றி, உலகின் பல நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு புதிய வழியாகும்.

அந்தத் தலைமைத்துவத்தினாலும் வழிகாட்டலினாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட சேவைகள் எல்லையற்றவை.

சிறந்த மானிடப் பண்புகள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான அந்த பங்களிப்பு அரசியல் கட்சிகள் மற்றும் திணைக்களங்களை விட பாரியதாகும்.

இவ்வாறு தன்னார்வமாக மனித சமுதாயத்தை ஒருங்கிணைத்த தலைவர் இதுவரை இருந்ததில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அரசாங்கத்தினது அதிகாரமோ, ஒரு கட்சியின் அதிகாரமோ அல்லது அத்தகைய எந்தவிதமான பாரம்பரிய அதிகாரமோ இல்லாமல் திரு.ஏ. டி. அரியரத்ன அவர்கள் ஒரு ஆசிரியரைப் போல் எங்கள் அனைவருக்கும் வழிகாட்டினார்.

அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்."

பிரதமர் ஊடகப் பிரிவு