புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு பங்ஙிய மீளாய்வு

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று 2025 டிசம்பர் 10 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு குறித்து முதற்கட்ட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், த மேலும் >>

வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறை, முதலீட்டு அங்கீகாரம் ஆகியவற்றை வினைத்திறனாக்கவும், ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும், - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உள்ளூர் ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்துவதன் மூலம், வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறை, முதலீட்டு அங்கீகாரம் ஆகியவற்றை வினைத்திறனாக்கவும், ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கைத்தொழில் மற்ற மேலும் >>

சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அனர்த்த நிலைமையின் பின்னர மேலும் >>

’திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசிகளை வேண்டி நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள்!

’திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசியையும், உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், 2025 டிசம்பர் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள வழிபாட் மேலும் >>

கொழும்பு மாவட்டத்தில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இதற்கு மேல் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே மக்கள் அனர்த்தத்தில் சிக்குவதற்குக் காரணம்.

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்கள மேலும் >>

சரியான நேரத்தில், துல்லியமாகக் கிடைக்கும் தரவுகள் வினைத்திறன்மிக்க தீர்மானங்களை எடுப்பதற்கு அத்தியாவசியமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை விசேடமாகக் கவனத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, டிசம்பர் 08ஆம் திகதி பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமரின் தலைமையில் நடைபெ மேலும் >>

திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவி.

’திட்வா’ சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றத்தின் தலைவரும் முன்னா மேலும் >>

பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025 நவம்பர் 27ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தினுள் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெர மேலும் >>

தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வரப் பிரதேச அதிகாரிகளின் வினைத்திறன் மிக்க ஒத்துழைப்பு அவசியம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாதுகாப்பு முகாம்களில் தங்கி இருக்கும் சிறுவர்களே மனநலன் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையா மேலும் >>

மீட்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இராஜதந்திர சமூகத்தினருக்கு அரசாங்கம் விளக்கம் அளித்தது; சுற்றுலாச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன, சர்வதேச ஆதரவு பலப்படுத்தப்பட்டுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2025 டிசம்பர் 04ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில், இலங்கைக்கான இராஜதந்திர சமூகத்தினருக்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற் மேலும் >>

அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு ஆகியவற்றுக்கு அமைய, போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும், ஆட்சேர்ப்பின் இரண் மேலும் >>

“எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை. எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது. “எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை. எமது மக்கள் வியக்கத்தக்க  மேலும் >>

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே அரசாங்கம் பொறுப்புக்கூறும்.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் பாராட்டுக்குரிய பங்களிப்பை தற்போது வழங்கி வருவருகின்றன. அவ்வாறு பங்களிப்புச் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர்களி மேலும் >>

அனர்த்த நிலைமை காரணமாகக் குவிந்துள்ள குப்பைகளை முறையான வேலைத்திட்டத்தின் மூலம் விரைவாக அகற்றி, சுத்தம் செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மேற்கு மாகாணக் கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (04) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது, அனர்த்த நிலைமை காரணமாகக் குவிந்துள்ள குப்பைகளை முறையான வேலைத்திட்டத்தின் கீழ் அகற்றி, சுத்தம் செய்யும் பணிகளை மூன்று வாரங்களு மேலும் >>

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அயராது பாடுபடும் முப்படைகள், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் அனைத்து வெளிநாடுகளுக்கும் அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களின் வா மேலும் >>

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம்  மேலும் >>

ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஏற்ப, முதலீட்டுப் பின்னணியையும் சூழலையும் உருவாக்கி, தந்திரோபாய ரீதியிலும் சரியான கொள்கைகளின் அடிப்படையிலும் செயற்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

ஏற்பட்டுள்ள நிலைமைகளைச் சமாளிக்க, தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டும் என்றும், வரவுசெலவுத் திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு முதலீட்டுப் பின்னணியையும் சூழலையும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சரியான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் பிரத மேலும் >>