சீன சபாநாயகர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் விரிவான கலந்துரையாடல்

அண்மையில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவை 2024.03.26 அன்று, சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) சீன மக்கள் தேசிய சட்டமன்றத்தின் தலைவரான சபாநாயகர் சாவோ லீஜி அவர்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.

இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் கடந்த பல தசாப்தங்களாக இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புறவுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதன் போது குறிப்பாக இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளுக்கு இவ்வருடம் ஸ்மார்ட் வகுப்பறைகளை (Smart Class Rooms) பெற்றுக்கொடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாராளுமன்ற பொதுச் சபைகளிலும் நீண்ட கால அரசியலிலும் பொதுமக்களுடனான பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன சபாநாயகர் சாவோ லெஜி ஆகியோரின் விசேட அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளின் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட மக்கள் மன்றங்களுக்கு இடையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலும் மக்கள் சார்ந்த வெற்றிகளை அடைந்துகொள்வதற்காக தகுந்த அறிவு, பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு