உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களின் பங்கேற்புடன் இன்று (2024.04.24) ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதியை மத்தள விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்றார்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காஞ்சன விஜேசேகர, நிமல் சிறிபால டி சில்வா, அலி சப்ரி, மகிந்த அமரவீர, ஆளுநர்களான செந்தில் தொண்டமான், ஏ.ஜே.எம்.எல்.முசம்மில், இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்திர ராஜபக்ஷ, இந்திக அனுருத்த, தாரக பாலசூரிய, விஜித பேருகொட, சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், வடிவேல் சுரேஷ், சுதர்சன தெனிபிட்டிய, திஸ்ஸ குட்டியாராச்சி, டி. வீரசிங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா, யதாமினி குணவர்தன, நாலக கோட்டேகொட, மிலான் ஜயதிலக்க, ஈரானின் எரிசக்தி அமைச்சர் அலி அக்பர் மெஹ்முதீன், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சமன் தர்சன பாடி கோரள ஆகியோரும் பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு