சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வசதிகளை வழங்குபவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று 2024.03.19 அன்று கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.

கலாநிதி சுப்ரமணியம் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்ற பற்றி விவரித்ததுடன், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள அடுத்த பணிப்பாளர் சபைக் கூட்டத்தில், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை தீர்மானிக்கும் என்றும் கூறினார்.

அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு விளக்கிய பிரதமர், சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு நிதியுதவி வழங்கும் நலன்புரித்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் விளக்கினார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. கே. ஜி. ஹரிச்சந்திர மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி வி. டி.விக்கிரமாராச்சி இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதனைத்தொடரந்து பிரதமரைச் சந்தித்த கடன் மறுசீரமைப்பு வசதியாளர்களான Lazard Frères SAS மற்றும் Clifford Chance LLP ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினர்.

பிரதிநிதிகள் குழுவில் Lazard Freires நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெரோம் அலெக்சிஸ், உதவிப் பணிப்பாளர் Valère Pierard, ஆய்வாளர் பிரான்செஸ்கா ரெஃபோ மற்றும் Clifford Chance நிறுவனத்தின் பங்காளர் Deborah Zandstra, மற்றும் James Kelton மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிரதிப் பணிப்பாளர் திரு. யொஹான் சமரதுங்க ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். .

பிரதமர் ஊடகப் பிரிவு