முன்னாள் அமைச்சர் டி.பி.இளங்கரத்ன அவர்களின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது தலைமையிலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடனும் இன்று (2024.05.01) கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொள்ளுபிட்டி ஸ்ரீ தர்மகீர்த்தராமயவின் விகாராதிபதி கலாநிதி பண்டாரவெல விமலதம்ம தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொகுகே, நாமல் ராஜபக்ஷ, சரத் வீரசேகர மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு