பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல, மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

செப்டம்பர் 11ஆம் திகதி கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் மேலும் >>

பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிக்கிறேன். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவுக்கு விடுத்த ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிப்பதாகவ மேலும் >>

டிஜிட்டல் பொருளாதார மாதத்திற்கு இணையாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான aigov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பஸ் கட்டணங்களை வங்கிக் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

டிஜிட்டல் பொருளாதார மாதத்துடன் இணைந்ததாக செயற்கை நுண்ணறிவு பற்றிய aigov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்படும் என்றும் , பஸ் கட்டணங்களை வங்கிக் அட்டைகள் மூலம் மேலும் >>

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகள் வழங்கப்படும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இன்று (09) ப மேலும் >>

தரவுகள் மீது மாத்திரம் தங்கியிராது, உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய படைப்பாற்றல் மிக்க ஒரு தலைமுறையே நமக்குத் தேவைப்படுகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் பாடசாலைகள் மத்தியில் 100 புத்தாக்க சங்கங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரின் தலைமையில் செப்டெம்பர் 8ஆம் திகதி கொழும மேலும் >>

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் பிரதமரைச் சந்தித்தார்.

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, செப்டம்பர் 8 அன்று பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற மேலும் >>

பிரதமரின் வாழ்த்துச் செய்தி

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய அன்பர்கள், முஹம்மது நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப் மேலும் >>

பிரதமருக்கும் இத்தாலியின் துணைச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி இராஜாங்க செயலாளர் மரியா திரிபோடி (Maria Tripodi) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செப்டெம்பர் 4 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

அரசியல் கலந்துரையாடல்களுக்கான வ மேலும் >>

“ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், “அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த காரணியாகும். ஒரு பொ மேலும் >>

டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி. ஹரிணி அமரசூரிய

2025 செப்டம்பர் 2 ஆம் திகதி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் (Galle Face Hotel) நடைபெற்ற, ருஹுண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்பாடு செய்த “சர்வதேச விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு 2025” (ISAE) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"காலநிலை நடவடிக்கை மற்றும் ந மேலும் >>

இலங்கையில் தனது உத்தியோகபூர்வ சேவைக்காலம் நிறைவுபெற்று நாட்டை விட்டுச் செல்லும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) வதிவிடப் பிரதிநிதி குன்லே அடியேனி (Kunle Adeniyi) அவர்களுக்கும்,பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு.

இந்த சந்திப்பின்போது, தனது பதவிக்காலத்தில் ஐ.நா. மக்கள்தொகை நிதியத்திற்கு இலங்கை வழங்கிய வலுவான ஒத்துழைப்பிற்கு திரு. அடெனியி தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, மகளிர் ஆணைக்குழுவை நிறுவுவதில் பிரதமர் அளித்த தலைமைத்துவ ஒத்துழைப்பிற்கு அவர் விசேட நன்றியைத் தெரிவ மேலும் >>

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு சிறு பிரிவின் விருப்பமாகவன்றி முழு நாட்டினதும் கலாசாரமாக மாற வேண்டும். -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் அறநேர்மை என்ற கருப்பொருளின் கீழ் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் நடைமுறைப்படுத்தபடும் இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத உள்ளூராட்சி நிறுவன மேலும் >>

’இனிக்கி பெஸ்டா’ ( Enikki Festa ) போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டு விழா: பிரதமர் பங்கேற்பு

மிட்சுபிஷி நிறுவனத்தின் அனுசரணையில், இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ’மிட்சுபிஷி ஆசிய சிறுவர் எனிக்கி ஃபெஸ்டா’ சித்திர நாட்குறிப்புப் போட்டியின் வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா ஆகஸ்ட் 28 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த  மேலும் >>

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அத்தகைய சமூகத்தின் மூலம், முழு நாடும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற முடியும்.

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும மேலும் >>

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு பிரதமரை சந்தித்தது

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் (HDP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 2025 ஆகஸ்ட் 27 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சட்டவாக்கத்தி மேலும் >>

ஊடக அறிக்கை

2025 ஆகஸ்ட் 25ஆம் திகதி ஹிரு செய்தி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், முகநூல் மற்றும் ஹிரு ஊடக வலையமைப்பின் பிற தளங்களில், "අගමැතිනි හරිනි මැදියම් රැයේ මෛත්‍රී එක්ක රනිල් බලන්න ඇවිත්" என்ற தலைப்பில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெளிவுபடுத்தவும்,  மேலும் >>

கோட்டே ரஜமகா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுகோபுர திறப்பு விழா ஆகஸ்ட் 24 ஆம் திகதி விகாரை வளாகத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.

வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விஹாரை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுகோபுரத்தை மகாசங்கத்தினர், பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்துவைக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 24 ஆம் திகதி விகாரை வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவி மேலும் >>

புதிய தூதுவர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைப் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்தக் குழுவில் இந்தோனேசியாவிற்கான தூதுவர் திருமதி எஸ்.எஸ். பிரேமவர்தன, பிரேசிலுக்கான தூதுவர் திருமதி சி.ஏ மேலும் >>