’Father Emir’ என கௌரவிக்கப்பட்ட கட்டார் நாட்டின் முன்னாள் தலைவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (Sheikh Hamad bin Khalifa Al Thani) அவர்களின் மறைவு குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த கட்டார் நாட்டிற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் மக்களினதும் இரங்கலைத் தெரிவிப்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்பகல் கட்டார் நோக்கிப் பயணமானார்.
இவ்விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு வழிவகுக்கும். இவ்விஜயத்தின் போது பிரதமர், எமிர் அவர்களின் குடும்ப உறவினர்களையும் அந்நாட்டின் இராஜதந்திரிகளையும் சந்திக்கவுள்ளார்.
பிரதமர் ஊடகப் பிரிவு