பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நவம்பர் 20ஆம் திகதி முற்பகல் ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்துக்குக் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அங்கு மகளிர் விடுதிகளைப் பார்வையிடச் சென்ற பிரதமர், தங்கியிருக்கும் முதியோரினதும், நோயாளர்களினதும் நலன்களை விசாரித்ததுடன், அவர்களுக்கு உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.
மகளிர் விடுதி வளாகத்தைப் பார்வையிட்ட பின்னர், நவீனமயப்படுத்தப்பட்ட சமையலறையையும் பிரதமர் பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஆண்கள் விடுதிகளுக்குச் சென்ற பிரதமர், அங்கு தங்கியிருக்கும் முதியோரின் நலன்களை விசாரித்து, அவர்களுக்கும் உணவுப் பொதிகளை வழங்கினார். மேலும், முதியோர் இல்லத்தின் பணியாளர்களுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராய்ச்சி, கோட்டை மாநகர சபையின் மேயர் அரோஷ அத்தபத்து, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார, விக்டோரியா முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் ஜகத் கோதாகொட ஆகியோருடன், மேல் மாகாணப் பிரதம செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு