பிரதமரின் தலைமையில் “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத நிகழ்ச்சி

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத நிகழ்ச்சி மே 27 ஆம் திகதி நாராஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபை கேட்போர்கூடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

புத்த பெருமானின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் பரிநிர்வாணமடைதல் ஆகிய புனித நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, பக்தர்களின் உள்ளங்களில் பௌத்த மத உணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பக்தி கீத நிகழ்ச்சியில், அமைச்சின் ஊழியர்களால் பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) சமந்தி மிஹிந்துகுல, மேலதிக செயலாளர் (தொழிற்பயிற்சி) சமந்தி சேனாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு