பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கனடா பயணமானார்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2025 ஜூன் 24 ஆம் திகதி கனடாவின் வான்கூவர் நகரை சென்றடைந்தார்.

அங்கு அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம், பொதுநலவாயக் கல்வி அமைப்பு மற்றும் கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் (Global Affairs Canada) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த

"கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" எனும் தலைப்பிலான சிறப்பு சமூக கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வு, கனடாவில் வசிக்கும் சமயத் தலைவர்களுக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

பிரதமர் ஊடகப் பிரிவு