பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் சீனா பயணம்

சீனாவில் நடைபெறவுள்ள 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, (11) இன்று இரவு பயணமாகிறார்

சீன மக்கள் குடியரசின் அழைப்பையேற்றுப் பிரதமர் இந்தச் சீன விஜயத்தை மேற்கொள்கின்றார்.

ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறும் இந்தச் சீனப் பயணத்தின்போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன அரசாங்கமும் பீஜிங்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்யும் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். மாநாட்டின் தொனிப்பொருள்: "ஒரு எதிர்காலம், பெண்களுக்கான நவீன, துரிதமான அபிவிருத்தி" என்பதாகும்.

இந்த விஜயத்தின்போது, பிரதமர், சீன மக்கள் குடியரசின் அதிபர் ஷீ ஜின்பிங், பிரதமர் லீ சியாங் ஆகியோருடனும் பல இருதரப்புச் சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு