கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டி இன்று (07) அலரி மாளிகைக்கு முன்பாக வீதி உலா சென்ற தேர்ப் பவனியில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கோயில் தேருக்கு அர்ச்சனைத் தட்டு வழங்கி வழிபாடுகளில் ஈடுபட்டார். - 2025-08-07