2026.10.24 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்டத்திற்குக் கல்வித் துறை தொடர்பான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, திம்புலாகல ஆரண்ய சேனாசனத்திற்கும் விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அங்கு விகாரை மண்டபத்திற்குச் சென்ற பிரதமர், மலர் பூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, விகாரையின் தலைமைத் தேரரான திம்புலாகல ராகுலாலங்கார நாயக்க தேரரைச் சந்தித்து சினேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.
இதன்போது, விகாரை மற்றும் பிரிவேனாவின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகப் பிரதமர் தலைமைத் தேரருடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினருடன், பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சருமான ரீ. பி. சரத் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு