தெதிகம கொடவெஹெர ராஜமஹா விகாரையை புனித பூமியாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

கேகாலை தெதிகம கொடவெஹெர ராஜமஹா விகாரையை புனித பூமியாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (24) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தெதிகம கொடவெஹெர ராஜமஹா விகாரையை புனித பூமியாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொடவெஹெர ராஜமஹா விகாரை பூமியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்த்p தொடர்பிலான முப்பரிமாண திட்டத்தை தயார் செய்து அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
வாகல்கடவினை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்படும் கொடவெஹெர ராஜமஹா விகாரையின் புதிய நுழைவாயில் தொடர்பிலும், பல்நோக்கு கட்டிடம், சதர மகா தேவாலயம் நிர்மாணிப்பு ஆகியன தொடர்பிலும் கௌரவ பிரதமர் இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.
தெதிகம ராஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஒத்னாபிடியே விமல தேரர் மற்றும் விகாராதிகாரி வணக்கத்திற்குரிய அளுத்நுவர சுமன தேரர் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
மேலும் குறித்த சந்திப்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உதய காந்த குணதிலக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, பிரதமரின் சிரேஷ்ட உதவி செயலாளர் பிரியங்க நாணயக்கார, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, புனித பூமி பணிப்பாளர் W.T.R.விதான, வரகாபொல பிரதேச சபை தவிசாளர் சரத் சுமனசூரிய, உப தலைவர் நிமல் ரணதுங்க, பிரதேச செயலாளர் ரங்கன சஜீவ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.