பொசன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

உன்னதமான பௌத்த தர்மத்தின் போதனைகளைச் சுமந்துகொண்டு எமது நாட்டுக்கு வருகைதந்த மஹிந்த தேரரின் வருகையை நினைவுகூரும் பொசன் நோன்மதி தினம், இலங்கை வாழ் பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.

அது குளங்கள், தூபிகள், கிராமங்கள் மற்றும் விகாரைகள் என்ற எண்ணக்கருவுடன் தூய சமய தத்துவத்தை தேசம் எங்கும் பரப்பி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயப் பொருளாதாரம் நிலவிய ஒரு சகாப்தத்தின் ஆரம்பமாகும். அது சமயம், சாசனம், கலாசாரம், சூழல், சமூக விழுமியங்கள் மட்டுமின்றி பல்வேறு புதிய எண்ணக்கருக்கள் சமூகமயப்படுத்தப்பட்ட காலகட்டமாகும்.

இந்த மகத்தான தத்துவத்தின் உன்னதத் தன்மையால் இலங்கையர்களான நாம் உலகில் எவருக்கும் சளைக்காமல் ஒரு உன்னத தேசமாக தலைநிமிர்ந்து நிற்கமுடியுமானது. அந்த உன்னத பண்புகளை உள்ளடக்கிய சமுதாயத்திற்காக இந்த பொசன் நோன்மதி தினத்தில் சரியான நடைமுறைகளை கடைப்பிடிப்போம்.



தினேஷ் குணவர்தன (பா.உ.)
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 ஜூன் 21ஆந் திகதி