நாமல் உயன தேசிய பூங்காவின் மேம்பாட்டிற்கு பங்களித்த ஊடகவியலாளர்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு பாராட்டு...

நாமல் உயன தேசிய பூங்கா சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய கலாசார நிதியத்திலிருந்து 10 மில்லியன் ரூபா...

நாமல் உயன தேசிய பூங்காவின் 33வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாமல் உயன தேசிய பூங்காவை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக பங்களித்த இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களுக்கான பாராட்டு விழா இன்று (2024.04.30) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது..

சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எட்மன் ரணசிங்க, சிறி ரணசிங்க மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டன.

இதன் போது வரலாற்று சிறப்பு மிக்க நாமல் உயன தேசிய பூங்கா தொடர்பான தொல்பொருள் ஆராய்ச்சியின் வரைவு அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நாமல் உயன தேசிய பூங்காவை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தமும் பேராதனை பல்கலைக்கழகத்துடன் கைச்சாத்திடப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன ..

நாட்டை அறிவின் மூலாதாரமாகவும், தேசத்தின் வளர்ச்சியின் செய்தியாகவும் ஆக்கிய எட்மன் ரணசிங்க மற்றும் சிறி ரணசிங்க ஆகிய இரு எழுத்தாளர்களை நினைவு கூர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாமல் உயன வனவாசி ராகுல தேரர் குறிப்பிட்டது போன்று ஊடகங்கள் தேசத்தை எழுச்சிபெறச் செய்துள்ளன. பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு ஊடக நிறுவனங்கள் ஏற்படுத்திய அந்த தேசிய எழுச்சியுடன், நாமல் உயனவை எமது நாட்டிற்கு வழங்க எங்கள் நாயக்க தேரர்கள் தலையிட்டனர்.

பல நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்ட நாமல் உயனவில் உள்ள இளஞ்சிவப்பு திருவாண பாறையை வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பார்த்திருக்கலாம். ஆனால் உலகையே வியக்க வைக்கும் வகையில் நாமல் உயனவை மற்றொரு மாபெரும் பரிசாக மாற்றியவர் ராகுல தேரர். இளஞ்சிவப்பு திருவாணா பாறையைப் பாதுகாத்து, அதை தேசிய பாரம்பரியமாக ஆக்கி, தேசத்திற்கு பாரம்பரியமாக வழங்கும் பணியை வெற்றிகரமாக முடித்த நிறுவனர் மற்றும் பாதுகாவலர் மற்றும் வழிகாட்டி அவர் தான். அதற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செலவழித்த ராகுல தேரருக்கு அது பெரும் புண்ணியம் சேர்க்கும்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட ஒரு தேசத்தின் தொடர்ச்சி, இருப்பு, பெருமை மற்றும் வெல்ல முடியாத பாரம்பரியத்தின் காரணமாக உலகம் எம்மைப் பார்த்தது. உலகம் எம்மிடம் வந்தது. காலனித்துவ காலத்தில் எங்களுக்கு பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் திரும்பிச் சென்றனர். ஆனால் நாமல் உயன அப்படியே இருந்தது.

இளஞ்சிவப்பு திருவாணாப் பாறையைப் பாதுகாத்து, மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் உயிர் பல்வகைமை கொண்ட பூங்காவை வருங்கால சந்ததியினருக்கு வழங்கியவர் நீங்கள்.

நாமல் உயன பூங்காவையும் இளஞ்சிவப்பு திருவாணா பாறையையும் தொடர்ந்தும் பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வேண்டும். உலகம் ஆராய்ச்சியை நிறுத்தவில்லை. உலகம் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. நாமல் உயனவும் தொடர்ச்சியான ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மையத்திலேயே உள்ளது. உலகின் ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் ஆராய்ச்சியாளர்களுக்கான ஆராய்ச்சி மையமாக இலங்கை மாறியுள்ளது.

நான் அமைச்சராக இருந்த போது உங்களுடன் இணைந்து தம்புள்ளை நகரத்தை கட்டியெழுப்பினோம். இளஞ்சிவப்பு திருவாணா பாறையின் பாதுகாப்பிற்காக நீங்கள் எதிர்பார்த்த தலைமையகத்தை அன்று நான் உங்களுக்கு வழங்கினேன். அதன் பின்னர் அந்த மையம் தம்புள்ளையின் மறுமலர்ச்சியின் குரலாக மாறியது. தம்புள்ளை இன்று உரங்காத நகரமாக மாறியுள்ளது. உங்களின் அர்ப்பணிப்பினால் தம்புள்ளை நகரம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் கவர்ச்சிகரமான நகரமாக மாறியது.

கடமை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தேரர் அவர்கள் வழங்கிய முன்னுதாரணம் மிகவும் முக்கியமானது. இந்த உன்னதமான பரிசை சிரமங்களுக்கு மத்தியிலும் பாதுகாத்து, அதை முறையாகத் தயாரிக்கும் அவரது திட்டத்தின் பலம் ஆராய்ச்சியாளர்கள், அந்த ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் புதிய விடயங்களைத் தேடும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர். புத்தரின் வழியைப் பின்பற்றிய நீங்கள் ஒருபோதும் குழப்பமடையவில்லை. இந்த கடினமான பயணத்தை பொறுமையுடன் கடந்து வந்தீர்கள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியிருந்ததுடன், ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன அதனை சபையில் சமர்ப்பித்தார்.

நாமல் உயன தேசிய பூங்கா ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் இங்கு உரையாற்றினார்

மார்ச் 28 ஆந் திகதி தேசிய நாமல் பூங்கா நிறுவப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதனை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. தேசிய நாமல் உயனவை ஆரம்பித்து நாட்டுக்கு அதன் செய்தியை எடுத்துச் செல்ல நாட்டின் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் எனக்கு ஆதரவளித்த காரணத்தினால் இன்று அலரி மாளிகையில் இவ்வாறான வைபவத்தை நடத்த முடிந்தது.

எட்மன் ரணசிங்க, சிறி ரணசிங்க, தற்போதைய திவயின பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாரத நிஷங்க, தற்போதைய லேக்ஹவுஸ் ஆசிரியர் குழுவின் பணிப்பாளர் சிசிர பரணதந்திரி மற்றும் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுமே என்னை இன்று இங்கு அழைத்து வந்தன. நான் அதை மறக்க மாட்டேன். உங்கள் கேமராக்களும், பேனாக்களும் தான் தேசிய நாமல் உயன பூங்காவை உலகிற்கு எடுத்துச் சென்றன. நான் செய்வது சரிதான் என்று என் மனசாட்சிக்குத் தெரியும். நாமல் உயன பூங்கா ஐந்து வருடங்களுக்கு முன்னர் மத்திய கலாசார நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நாமல் உயனவை முறையாக பராமரிக்க மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்காக நாமல் உயனவை பாதுகாப்பதற்காக பேராதனை பல்கலைக்கழகத்துடன் இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றோம். தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், வனவியல் திணைக்களம் இணைந்து தேசிய நாமல் பூங்காவை பாதுகாக்க வேண்டும். மத்திய கலாசார நிதியத்தில் நவீனமயமாக்கல் மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் சொல்வது போல், சுற்றறிக்கைகள் மற்றும் சட்டங்கள் எல்லாவற்றிற்கும் எதிராக உள்ளன.

தேசிய நாமல் பூங்காவின் அபிவிருத்திக்காக இன, மத வேறுபாடின்றி பாடுபட்ட மூவருக்கு தேசிய கௌரவ விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, அசங்க நவரத்ன, யதாமினி குணவர்தன, வியட்நாம் தூதுவர் ஹோ தி தா துர்க், பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க உள்ளிட்டோர் மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு