மே தினச் செய்தி

உழைக்கும் மக்களின் இரத்தத்தினாலும் வியர்வையினாலும் போசிக்கப்பட்ட பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட தாய்நாட்டில் 137வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியின் மத்தியிலேயே இன்று நாம் அதைக் கொண்டாடுகிறோம். இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட உலகின் பல நாடுகள் உழைக்கும் மக்களின் பலத்தினாலேயே மீண்டெழுந்தன. அது எமது பாரம்பரியமும் கூட. பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு விவசாயிகள் ஒரு ஆரம்பத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். முதலில் நாட்டை உணவில் தன்னிறைவு அடையச் செய்வதில் விவசாயிகள் முன்னிலை வகித்தனர். அதேபோன்று, ஒவ்வொரு துறையிலும் புதியதோர் எழுச்சி ஏற்பட்டது. எனவே, இந்த உலகத் தொழிலாளர் தினத்தில், நாம் இருந்ததை விட சிறந்ததோர் நிலையை அடைய நாங்கள் உறுதிபூணுவோம்.

எந்த ஒரு உடன்படிக்கையின் போதும் உழைக்கும் மக்களின் உரிமைகளை நாம் புறக்கணித்துவிட மாட்டோம். அரசாங்கம், தொழிலாளர்கள், தொழில்தருனர்கள் என்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் முன்னேறிச்செல்வோம்.

உழைக்கும் மக்களுக்காக நாம் பெற்றுக்கொண்ட வெற்றிகள் ஏராளம். அந்த வெற்றிகளின் அடிப்படையில் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி, சதிகார சக்திகளின் முயற்சிகளை முறியடித்து, பெற்ற உரிமைகளை பாதுகாத்து, தாய்நாட்டை கட்டியெழுப்ப இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் உறுதிகொள்வோம்.

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

2023.04.30

Download Release