சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் இலங்கையுடனான 40 வருட பங்காண்மைத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரை...

சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான 40 வருட பங்காண்மைத்துவத்தைக் குறிக்கும் வகையில் இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் நினைவு முத்திரை மற்றும் முதலாம் நாள் கடித உரை வெளியிடப்பட்டது.

முதலாவது நினைவு முத்திரையும் முதல் நாள் கடித உரையும் இன்று (29.05.2024) ஸ்ரீ ஜயவர்தனபுர பெலவத்தையில் உள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவன தலைமையகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சமன் படிகோரள, சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் நிர்வாக சபையின் தலைவர் கலாநிதி சிமி கமல், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மார்க் ஸ்மித், விசேட ஆலோசகர் கலாநிதி பி. ராமானுஜம் மற்றும் தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு