பொதுநலவாய மகளிர் உள்ளூராட்சி வலையமைப்பு (ComWLG) மற்றும் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) இணைந்து ஏற்பாடு செய்திருந்த ’பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஊடாக சமூக தாங்குதிறனை வலுப்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளில் இரத்மலானை, CEWAS இல் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்-
அரசியல் பிரதிநிதித்துவத்தின் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கான உரிமையைக் கோருவதற்கு உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசாங்கங்களின் ஊடாக பெண்களுக்கு, குறிப்பாக இந்த அமைப்புகளுக்கு வழங்கக்கூடிய தொடர்ச்சியான போராட்டங்கள், அழுத்தங்கள் மற்றும் மாற்றம் குறித்த விடயமாகும். உள்ளூராட்சி நிறுவனங்களில் பாலின சமத்துவத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் திருப்திகரமாக இல்லை.
பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு எனது தலைமையிலான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற விசேட செயற் குழு, தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25% பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2018 இல், இந்த கோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இது மேலும் விரிவாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டாலும், தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் இன்னும் செய்யப்பட வேண்டும். இவை நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். ஒரு எளிய பெரும்பான்மைக்கு சட்டங்களை உருவாக்க முடியும். மூன்றில் இரண்டு விசேட அங்கீகாரத்துடனான பெரும்பான்மைக்கும் சட்டங்களை உருவாக்க முடியும், ஆனால் அரசியலமைப்பு ரீதியாக, நம் நாட்டின் உயர் நீதிமன்றம் மக்கள் கருத்து வாக்கெடுப்பு தேவை என்று குறிப்பிடுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை உணவு, உடை, உறைவிடம் ஆகியவை ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத உரிமைகள் என்று அறிவித்தது. இந்த இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? இல்லை, உலகெங்கிலும் உள்ள பல சமூகங்கள் இன்னும் இந்த இலக்குகளை அடைய போராடிக் கொண்டிருக்கின்றன. பாலின சமத்துவ வரலாற்றில் இலங்கை பெருமைப்படலாம். 1931-ல் வயது வந்தோர் வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஆண்களுக்கு நிகரான வாக்குரிமை எமது பெண்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை, தலைமைத்துவ வாய்ப்பு மற்றும் சம ஊதியம் வழங்குவதில் முன்னோடியாக பெண் பிரதமரைக் கொண்ட முதல் நாடு இலங்கை.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைத்தீவு, பஹாமாஸ், கரீபியன் நாடுகள், ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பா உட்பட பல பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அமர்வுகளில் கலந்து கொண்டனர்.
பொதுநலவாய உள்ளுராட்சி அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி கார்ல் ரைட், பொதுநலவாய உள்ளூராட்சி அமைப்பின் செயலாளர் நாயகம் லூசி ஸ்லாக், பொதுநலவாய மகளிர் உள்ளூராட்சி வலையமைப்பின் தலைவி ஃப்ராசெட் கிப்சன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், இரத்தினபுரி மாநகர ஆணையாளர் அனுர பிரேமரத்ன, இலங்கை உள்ளூராட்சி சம்மேளன தலைமை நிறைவேற்று ஹேமந்தி குணசேகர, ஒத்துழைப்புத் தலைவர் ஜோஹான் ஹெஸ்ஸே, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு, பொதுநலவாய உள்ளூராட்சி கூட்டமைப்பு மற்றும் இலங்கை உள்ளூராட்சி சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு