இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊபர் ஸ்ரீலங்கா கம்பனியினர் தமது புதிய ஒருங்கிணைந்த கருத்திட்டம் தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினதும், ஊபர் ஸ்ரீலங்கா கம்பனியினதும் பிரதிநிதிகள் சிலர் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களை 2022.09.01 ஆந் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்தனர்.

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள இரண்டு இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி தொடர்பில் பிரதமர் அவர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

நாடு முழுவதுமுள்ள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிப்பதற்காக இந்த உதவித்தொகை பயன்படுத்தப்படவுள்ளது.

ஊபர் கம்பனியின் உலகளாவிய நிர்வாகி, ஆசிய பிராந்தியத்தின் விநியோகம் தொடர்பிலான பொது முகாமையாளர் சஸ்கியா டி ஜோங்க், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க, ஊபர் ஸ்ரீலங்கா கம்பனியின் பொது முகாமையாளர் பாவினா டெடிலானி ஜயவர்தன, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு கிளைத் தலைவர் குமாரி கொத்தலாவல ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.