அபிவிருத்தி லொத்தர் சபை நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக பாரிய முதலீட்டை மேற்கொண்டு வருகின்றது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பு, வோட்டர்ஸ் எட்ஜில் இன்று (2024.04.29) நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் விற்பனைப் பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –

முதலில் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அபிவிருத்தி லொத்தர் சபையின் பண நன்கொடை மற்றும் முதலீடு மூலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்ட ஆதரவையும் உதவியையும் நினைவுகூர்கிறேன். அபிவிருத்தி லொத்தரின் பெறுமதியையும் அர்த்தத்தத்தையும் நாடு முழுவதும் கொண்டுசென்று நாட்டு மக்களை பங்குதாரர்கள் ஆக்குவதற்குப் பங்களித்த அபிவிருத்தி லொத்தரின் பிரதிநிதிகள் இன்று பெருமிதம் கொள்கின்றனர்.

நாட்டின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யவும், நாட்டின் எதிர்காலப் போக்கை வடிவமைத்த மஹாபொல மற்றும் அத்தகைய துறைகளை உருவாக்கிய கல்விப் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களில் குறிப்பாக முதலீடு செய்ய முடிந்தது. இந்த கல்வி பங்களிப்புகள் அடுத்த தலைமுறைக்கானதாகும்.

இலங்கையில் இதுபோன்ற பல வாய்ப்புகளுக்கு பங்களிக்கும் அபிவிருத்தி லொத்தரின் நீண்ட மற்றும் பெருமைமிக்க பயணத்தில், மேலும் பல வெற்றிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் முகம்கொடுத்தது. பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றுவதற்கு நீங்கள் செய்த பங்களிப்பிற்காக அனைத்து விற்பனை பிரதிநிதிகளுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்.

இந்நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, மதுர விதானகே, சி.பி.ரத்நாயக்க, ராஜித சேனாரத்ன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அஜித் நாரகல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு