அனுதாபச் செய்தி

எமது தேசத்திற்கு அளப்பரிய சேவையை ஆற்றி, தேசத்திற்கு கீர்த்தியையும் பெருமையையும் சேர்த்த மிகப்பெரும் அறிவாளுமை கலாநிதி நளீன் டி சில்வா அவர்களுக்கு எமது உன்னத மரியாதையை செலுத்துகின்றோம்.

எமது நாட்டிற்கும், மக்களுக்கும், சிங்கள இனத்திற்கும் பெரும் பணியை ஆற்றிய கலாநிதி நளீன் டி சில்வாவின் மறைவு நிச்சயமாக தேசத்திற்கு ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தும்.

தாய்நாட்டின் மிகக் கடினமான காலப்பகுதிகளில் துணிச்சலுடன் தேசத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து தேசத்தை ஆக்கப்பூர்வமாக எழுச்சிபெறச்செய்த கலாநிதி நளீன் டி சில்வா தேசத்தின் அரியதோர் புலமைச் சொத்து ஆவார்.

அவருடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகவும் பணியாற்றவும் கிடைத்ததை இந்த சந்தர்ப்பத்தில் நான் மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறேன்.

கலாநிதி நளீன் டி சில்வா அவர்களின் இழப்பினால் வாடும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.

கலாநிதி நளீன் டி சில்வா அவர்களுக்கு நித்திய சுகம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.


தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு