கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று (23.05.2024) அலரி மாளிகையி இடம்பெற்றது.

சிங்கப்பூர் ஸ்ரீலங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கரதெடியன குணரத்ன தேரரின் நன்கொடையால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு