சர்வதேச சமூகத்தில் எமது நாடு அடைந்துள்ள அங்கீகாரத்தை மேலும் வளர்த்து, முன்கொண்டு செல்வதற்கு ஆதரவளிப்பதே இன்று நாம் செய்ய வேண்டிய பணியாகும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

பதிவாளர்கள் திரட்டும் பெறுமதியான ஆவணங்களைப் பயன்படுத்தியே சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன...

உங்கள் சவாலான பணி சரியாக நடைபெறாவிட்டால் அது பல்வேறு பிரச்சனைகளின் தொடக்கமாக மாறிவிடும்...

அலரி மாளிகையில் இன்று (28.06.2024) நடைபெற்ற கிராமியப் பதிவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்

நீங்கள் மனித சமுதாயத்தின் இருப்புக்கும் முன்னேற்றத்துக்கும் மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்றி வருகிறீர்கள். சில நீண்ட கால சட்டதிட்டங்கள் மாறும்போது நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், நட்புரீதியான பேச்சுவார்த்தை மூலம் அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. நீங்கள் குடிமக்கள் தொடர்பான கடினமான, திருப்தியான வேலையைச் செய்தாலும், அதைச் சரியாகச் செய்யாவிட்டால், அது பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

நாட்டில் நிலவிய அமைதியின்மை காரணமாக 40 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த மூன்று வயோதிபர்கள் எங்களைச் சந்திக்க வந்தனர். அவர்களைப் பற்றிய எந்தப் பதிவேடும் கிடைக்கவில்லை. நான் இங்கு வாழ்ந்தேன் என்பதை மட்டுமே அவர்களால் காட்ட முடியும். அப்போதிருந்து, உங்களின் விலைமதிப்பற்ற ஆவணங்களைத் திரும்பிப் பார்ப்பதன் மூலம் அவர்களின் உரிமையை உங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. யாழ். நகரபிதா துரையப்பாஅவர்கள் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அலரி மாளிகைக்குச் சென்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிய வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

40 வருடங்களுக்குப் பின்னர், வெளிநாட்டில் இருந்த அவரது பிள்ளைகள் தமது சட்டப்பூர்வ வாரிசுரிமை மற்றும் தந்தைக்கான அரச உரிமைகள் தொடர்பாக இலங்கைக்கு வந்தனர். நீங்கள் சேகரித்த பெறுமதிமிக்க ஆவணங்களைப் பயன்படுத்தியே இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும். நீங்கள் அத்தகைய மதிப்புமிக்க, சவாலான, கடமையில் ஈடுபட்டுள்ளீர்கள்.

ஒரு காலத்தில் ஐந்து சதம் கொடுத்து பேருந்தில் போனோம், இன்று ஐந்து சதத்திற்கு எதனையும் வாங்க முடியாது. அது உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் விதம். பணவீக்கத்தின் ஒரு பண்பு. அதனால்தான் எங்கள் சம்பளம் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதில்லை. வருமானம் மற்றும் செலவினங்களைப் கையாள்வதற்கான தேவையின் அதிகரிப்பிலிருந்து எழும் நிலைமைகளைச் சந்திக்க பொருளாதாரம் விரிவடைகிறது.

நாங்கள் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்தவந்திருக்கின்றோம். நாம் அனைவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிறந்தவர்கள். அந்த யுத்த காலத்தின் பின்னர் அவ்வாறானதொரு இக்கட்டான நிலை ஏற்படவில்லை. நமது முன்னோர்கள் போர்க்காலத்தில் பஜிரி காலத்தில் வாழ்ந்ததாக கூறுவார்கள். அப்படி ஒரு காலகட்டம் நாட்டிற்கு ஏற்படாமல் பொருளாதார அழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற உதவிய பொதுச் சேவையாளர்களில் நீங்களும் அங்கம் வகிக்கிறீர்கள். சமுதாயத்தின் திருப்தியைப் பேணக்கூடிய வகையில் குடிமக்களிடம் நம்பிக்கையை உருவாக்க உங்கள் ஆதரவு தேவை.

வெளி நாட்டிற்கு காசோலை அனுப்பப்பட்டால், அதை மாற்றாமல் தூக்கி எறிந்த ஒரு காலம் இருந்தது. அவ்வளவுக்கு கடினமான நிலையில் சர்வதேச கொடுக்கல் வாங்கல் ஸ்தம்பித்திருந்தது. அதை சரி செய்யும் வகையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உதவி வழங்கும் நாடுகள், சர்வதேச கடன் நிறுவனங்கள் அனைத்தும் இன்று மீண்டும் நம் நாட்டை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நாம் வந்துள்ளோம். நாம் செய்ய வேண்டியது இந்த வளர்ச்சியை மேலும் முன்கொண்டு செல்ல ஆதரவளிக்க வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த

இலங்கையின் ஒவ்வொரு நிலப்பரப்பையும் உள்ளடக்கிய அமைச்சும் திணைக்களமும் எங்களிடம் உள்ளன. நீங்கள் நூற்று அறுபது வருடங்களை அடைந்த, நாடு இருக்கும் வரை இருக்க வேண்டிய ஒரு திணைக்களத்தின் சொந்தக்காரர்கள். உரிமைகள் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாக்கவும் பதிவு செய்யவும் நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான திணைக்களத்தைப் பாதுகாக்கவும், பேணவும், அதன் நன்மதிப்பைப் பேணவும் பாடுபடுவது இத்துறையில் இருப்பவர்களின் பொறுப்பாகும்.

பொது நிர்வாக அமைச்சின் அமைச்சர் என்ற வகையில் பிரதமரும் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நானும் அரச அதிகாரிகளுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத ஒரு கணக்கே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரின் முதிர்ந்த அறிவு, அரசியல் நுணுக்கம் மற்றும் சமூக அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, முதலில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தார். ஒரு கிராமத்திற்கோ, அலுவலகத்திற்கோ செல்ல வழியில்லாத காலக்கட்டத்தில், பல இடங்களில் புற்களை தொங்கவிட்டு, அரசியல்வாதிகள் நிராகரிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. பதவியில் இருக்கும் சில படித்த, புத்திசாலிகள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தினர். அப்படிப்பட்ட நேரத்தில் கிராமத்தில் இருந்து தொடங்குவோம் என்று பிரதமர் கூறினார்.

நாங்கள் உணவு பாதுகாப்பு போசனை முறையொன்றை உருவாக்கினோம். கிராமத்தில் உள்ள அரசு அதிகாரிகளின் ஆதரவுடன், ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்த அறிவுறுத்தினோம். காசு இருந்தும் சந்தைக்குப் போய் போசனையான உணவை வாங்க முடியாத நிலையில் இரண்டு வருடங்களை கழித்தோம். ஆறு மாதங்களுக்குள் உணவுப் பாதுகாப்பின்மை மறைந்து உணவுப் பாதுகாப்பு உருவானது. இன்று பலர் நோய்வாய்ப்பட்டு வீதிகளில் உள்ளனர். ஆசிரியர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். நீங்கள் நோய்வாய்ப்படவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நோய்வாய்ப்பட்டு விடுமுறை எடுப்பது என்பது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். அந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்தி இரண்டு நாட்களுக்கு முன்கூட்டியே கூறி நோய்வாய்ப்படும் நாடு.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எல்லோரும் முடியாது என்று கூறிய போது எமது பிரதமர் ஜனாதிபதியுடன் கைகோர்த்தார், அதுதான் முக்கியம். அவ்வாறு கட்டியெழுப்பப்பட்ட நல்லிணக்கத்தில் தான் அரசாங்கம் முன்னோக்கி சென்று பிரச்சினைகளை தீர்த்து அரச அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கக்கூடிய நிலைக்கு நாட்டை கொண்டு வந்தது. இப்போது, திருமணங்களை நடத்தக்கூடிய ஒரு நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதைப் பற்றி நாம் நினைவில் கொள்ளாவிட்டால், ஒவ்வொருவரும் செய்த தியாகத்தின் மதிப்பு போய்விடும். எல்லாம் முடிந்து பிரச்சனைகள் முழுமையாய் தீர்க்கப்பட்ட நாடாக நாம் இன்னும் மாறவில்லை.

தேர்தலையோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினையையோ முன்னிறுத்தி அரசை நெருக்குதலுக்கு உள்ளாக்கி உரிமைகளை வென்றுவிட்டோம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவ்வாறு அதிகரிக்கப்படும் சம்பளத்தினால் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்போதுள்ள சம்பளம் கூட இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். நாம் செய்ய வேண்டியது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது, குழப்பமான சூழ்நிலையைத் தீர்த்து, முன்னேறி, வெற்றிகரமான நாட்டில் உரிமைகளை வென்றெடுப்பதாகும். සමහර சில குருட்டுத்தனங்களாலும், தெளிவான பார்வை இல்லாத சில அறிக்கைகளாலும், நாடு இன்று இருக்கும் இடத்திலிருந்து கீழே விழும் நிலை ஏற்பட முடியும். எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்ப வேண்டிஏற்படலாம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நீங்கள் கொடுத்த பலம், ஆதரவு போன்றவை அனைத்தும் பயனற்றுப் போய்விடும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார, முன்னாள் கொழும்பு மாவட்ட செயலாளர், பிரதமரின் இணைப்பாளர் கே. ஜி விஜேசிறி, பதிவாளர் நாயகம் டபிள்யூ. ஆர். ஏ. என். எஸ். விஜயசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு