இலங்கையின் முதலாவது தபால் அட்டை வெளியிடப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு விசேட தபாலட்டை வெளியிடும் நிகழ்வு.

இலங்கையின் முதலாவது தபால் அட்டை வெளியிடப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு விசேட தபாலட்டை வெளியிடும் நிகழ்வு.

இலங்கையின் முதலாவது தபாலட்டை வெளியிடப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட ஞாபகார்த்த தபாலட்டையானது, போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன அவர்களால் இன்று (01) முற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

1872ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி இலங்கையின் முதலாவது தபாலட்டை வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இரண்டு சதம் பெறுமதியான அந்த தபாலட்டை விக்டோரியா இராணியின் உருவத்தைக் கொண்டமைந்திருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, யதாமினி குணவர்தன, முதிதா டி சொய்சா, டொக்டர் கயாஷான் நவநந்த, வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட்ட, தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.