பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கை முழுவதிலும் பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் உள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், குறித்த விடுதிகளின் அத்தியாவசிய வசதிகளை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 1,008 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில், 2026-2028 காலப்பகுதியில் இப்பாடசாலை விடுதிகளை நவீனமயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

பிரதமர் ஊடகப் பிரிவு

Special attention must be directed to food security, water management, and energy management in preparation for the anticipated impacts of El Niño. - Prime Minister Dr. Harini Amarasuriya

It is important to enhance the services such as day-care centres and vocational training programmes for persons with disabilities, and community-based activities for older persons.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that special attention should be directed towards food security, water management, and energy management in preparation for anticipated impacts of El Niño.

The Prime Minister made these remarks while attending the Colombo District Coordinating Committee meeting held today (16) at the Colombo District Secretariat.

During the meeting, attention was focused on the progress of development programmes planned for 2026 as at 15 June 2026, including the Decentralized Budget Programme, Rural Roads Programme, Disaster Risk Reduction Projects, the Prajashakthi Programme, and projects implemented under line ministries.

While reviewing projects being implemented under the Ministry of Sports, a decision was taken at the meeting to establish a Sports Sub-Committee for the Colombo District and Minister of Sports and Youth Affairs Mr. Sunil Kumara Gamage stated that future activities would be planned through this sub-committee.

Prime Minister Dr. Harini Amarasuriya also emphasized the need to pay special attention to the development of sports activities in rural schools.

Highlighting the importance of preparing for the direct impacts of the anticipated El Niño weather conditions in Sri Lanka and the global challenges following the situation, the Prime Minister emphasized the need to focus on food security, water management, and energy management. The Prime Minister further noted the importance of conducting awareness programmes on energy conservation and the efficient use.

Commenting on the programme to improve accessibility for persons with disabilities implemented under the Prajashakthi Programme, the Prime Minister stated that special attention should also be given to strengthening services such as day-care centres and vocational training programmes for persons with disabilities, and community-based activities for older persons.

The event was attended by Deputy Speaker Dr. Rizvie Salih, Deputy Minister of Media Dr. Kaushalya Ariyarathne, Chairman of the Colombo District Coordinating Committee and Member of Parliament Lakshman Nipuna Arachchi, Colombo District Secretary Ginige Prasanna Janaka Kumara, public representatives of the Colombo District, government officials, and other invitees.

Prime Minister’s Media Division

டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கடந்த கால சவால்களை முறியடித்ததைப் போன்று, டெங்கு எனும் சவாலையும் கூட்டு முயற்சியால் முறியடிப்போம்.

டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று அவசியமென்றும், கடந்த கால சவால்களை முறியடித்ததைப் போலவே, டெங்கு எனும் சவாலையும் கூட்டு முயற்சியால் முறியடிக்க வேண்டுமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு வாரத்திற்குச் சமாந்தரமாக, டெங்கு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதையும் பொதுமக்களிடையே சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு,16 ஆம் திகதி கொட்டாவ பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட டெங்கு ஒழிப்பு நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

தற்போது எமது நாட்டில் டெங்கு அபாயம் அதிகரித்து வருகின்றது. கொழும்பு மாவட்டம் அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றது. அதிலும் மகரகம நகரம் குறிப்பிடத்தக்க நிலையில் இருப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக, பாடசாலைகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டெங்கு அபாயம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு அரசாங்கம் என்ற வகையில், டெங்கு ஒழிப்பு வாரத்தை அறிவித்து, அந்த வாரத்திற்குள் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள டெங்கு அபாயத்தைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வாரத்திற்கு மட்டுமல்லாது, இதற்காக நீண்டகால வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் செயல்பட வேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் எதிர்கொண்ட சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததைப் போன்றே, இப்போதும் கூட்டு முயற்சியின் மூலம் இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும். டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டைத் தமது சொந்தப் பொறுப்பாகக் கருதி, முதலில் கொழும்பு மாவட்டத்தை அதிக அபாயத்திலிருந்து குறைந்த அபாயமுள்ள பிரதேசமாக மாற்றி, படிப்படியாக இந்நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கொட்டாவ பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மகரகம நகர சபைத் தலைவர் சமன் சமரகோன், இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கிய கொட்டாவ நகர சபை, கொட்டாவ பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர், மகரகம பிரதேச செயலகம், பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, காணிப் பதிவு அலுவலகம், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, கொட்டாவ தர்மபால வித்தியாலயம், கொட்டாவ ஆனந்த வித்தியாலயம் மற்றும் கொட்டாவ வர்த்தக சங்கம் உள்ளிட்ட தரப்பினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கம்லத், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, மகரகம நகர சபைத் தலைவர் சமன் சமரகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களுடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஜூன் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்தும், இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடல் சுமூகமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்தது.

வர்த்தகம், முதலீடு, நிலையான அபிவிருத்தி, பெண்களின் நலன் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பாலின சமத்துவத்தை முன்னெடுப்பதற்கும், அரச நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, தற்போதுள்ள சவால்கள் மற்றும் பெண்களின் அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தொடர்ச்சியான கொள்கை ரீதியான ஆதரவு, திறன் அபிவிருத்தி தொடர்பான முன்னெடுப்புகள் மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களின் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno, ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் பிரதித் தலைவர் Ms. Galija Agiseva, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பிரதமரைச் சந்தித்து விடைகொடுத்தார்

இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் அந்தாலிப் எலியாஸ் H.E. Andalib Elias, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதை முன்னிட்டு, ஜூன்15 அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் உயர்ஸ்தானிகர் அந்தாலிப் எலியாஸ் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்கும் பங்களிப்புகளுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்தோடு, இரு நாட்டு மாணவர்களின் நலனுக்காக கல்வித்துறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பரஸ்பர நலன் சார்ந்த ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் திரு. முஹம்மது ஜன்னதுல் ஹபீப் Md. Jannatul Habib, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகாவத்த, மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் அதிகாரிகள் ஆதியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கான பெல்ஜியம் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்

இலங்கைக்கான பெல்ஜியம் தூதுவர் Didier Vanderhasselt அவர்கள், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதை முன்னிட்டு, ஜூன் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, அவரது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்காக தூதுவர் Didier Vanderhasselt அவர்கள் ஆற்றிய முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கையில் பெல்ஜியத்தின் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.

பிரதமரைச் சந்திப்பதற்கான வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்த தூதுவர் Didier Vanderhasselt, தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் நேர்மறையானதாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

கல்வித் துறையில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான உறவுகளைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அதனை மேலும் பலப்படுத்துவதன் அவசியத்தையும் உறுதிப்படுத்தினர்.

புதுடெல்லியில் உள்ள பெல்ஜியத் தூதரகத்தின் முதலாம் செயலாளர் Jonas Heirbrant, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகாவத்த, வெளிவிவகார , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு