







வாழ்க்கை வரலாறு
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஐந்தாவது ஜனாதிபதியாவார். ஜனவரி 26, 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாக அவர் தெரிவுசெய்யப்பட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்ரிரிஈ) பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்து, நாட்டின் பாதையை சமாதானம், பலமான ஜனநாயகம், துரித பொருளாதார அபிவிருத்தி நோக்கிச் செலுத்திய தேசியத் தலைவராக அவரை இலங்கையின் வாக்காளர்கள் அங்கீகரித்ததைக் காட்டியது. மே 2009இல் எல்ரிரிஈ இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது நாமுழுவதற்குமான தேர்தலில் மற்றும் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னராக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வாக்காளர்கள் சுதந்திரமாகப் பங்குபற்றிய தேர்தலிலியே மஹிந்த ராஜபக்ஷவின் மீள்தேர்வு இடம்பெற்றது.
ஆரம்ப வருடங்கள்
ஆறு சகோதரர்களையும் மூன்று சகோதரரிகளையும் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் ஆழ் தெற்கில் வீரகெட்டியவில் நவம்பர் 18, 1945இல் பிறந்தார். அவரது ஆரம்பக் காலத்திலிருந்து அவர் சிங்கள – பௌத்த பாரம்பரியங்களுக்கு ஏற்றவாறு வளர்க்கப்பட்டார். அரசியலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷவின் தந்தை டி.ஏ. ராஜபக்ஷ, மாமா, மைத்துனர்கள் போன்றோரும் கல்விகற்ற தெற்கு நகரான காலியின் றிச்மொன்ட் கல்லூரியில், அவரும் ஆரம்பக் கல்வி கற்றமையூடாக, பாடசாலை செல்லலிலும் அவரது குடும்ப பாரம்பரியம் காணப்பட்டது. அவரது கல்வி, அதன் பின்னர் கொழும்பிலுள்ள நாலந்தாக் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றுக்கு பின்னர் மாற்றப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதன்முதலில் தனது 24 வயதில் ஶ்ரீசுக-இன் அங்கத்தவராக பெலியத்த தேர்தல் தொகுதியிலிருந்து 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். அவர் அப்போதைய நிலையில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய இளைய பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு, அவரது தந்தை தெரிவான அதே தேர்தல் தொகுதியிலிருந்தே அவரும் தெரிவாகியிருந்தார். அவர் அமைச்சராக 1994ஆம் ஆண்டு நியமிக்கப்படும்வரை பிரதானமாக தெற்கு நகரான தங்காலையில் 1977ஆம் ஆண்டிலிருந்து 1994வரை சட்டத்துறையில் ஈடுபட்டார். அது அங்குள்ள மக்களுடனும் அவர்களது தேவைகளுடனும், அத்துடன் தென் பகுதியின் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாகவும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தியது. தனது பாராளுமன்ற ஆசனத்தை 1977ஆம் ஆண்டு இழந்த பின்னர், அவர் அதைத் தொடர்ந்த 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதைப் பெற்றார். அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மீளத் தெரிவுசெய்யப்பட்டதோடு, 2005ஆம் ஆண்டு நவம்பரில் நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவாகும் வரை அப்பதவியை வகித்தார்.
அபிவிருத்தி
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், மகம றுகுணுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம், மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் முதற்கட்டம், கெரவலப்பிட்டிய இணைந்த வெப்ப மின்சக்தி நிலையம், மேல் கொத்மலை நீர்மின்சக்தி செயற்றிட்டம் உட்பட பல பெரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. அவரது ஜனாதிபதிக் காலத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்கு துறைமுகங்களை தரமுயர்த்தவும், நாட்டின் பெரிய நகரங்களை இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உட்பட்ட மூன்று புதிய அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்குதல் ஆகியவற்றையும் முன்னெடுத்தார். மின்சக்தி விநியோகத்தை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவப்படுத்தலானது, விடுதலைப் புலிகளால் தொடர்புகள் அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக, நாட்டின் 90 சதவீதமான பகுதிகள் தேசிய வலையமைப்பின் மூலம் மின்சாரம் பெறுவதற்கு வழிசெய்தது.
குடும்பம்
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்களை மணமுடித்துள்ளதுடன், அவர்களுக்கு மூன்று மகன்கள் காணப்படுகின்றனர்: நாமல், யோஷித்த, றோகித்த.
பதிவிறக்க - சுற்றறிக்கைகள்
PTF/03/2020(vi) - தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்குதல் | பதிவிறக்க |
ගෘහ ආර්ථිකය සහ පෝෂණය වැඩිදියුණු කර පවුල් ඒකක සවිබල ගැන්වීමේ ජාතික වැඩසටහන | பதிவிறக்க |
ග්රාමීය ආර්ථිකය නඟාසිටුවීමේ ජාතික වැඩසටහන - අමාත්යාංශ සංවර්ධන යෝජනා / ප්රගති සමාලෝචන පත්රිකාව | பதிவிறக்க |
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டம் | பதிவிறக்க |
PTF/03(iv) - தோன்றியுள்ள அனர்த்த நிலைமை காரணமாக சமூக நன்மை நிகழ்ச்சித்திட்டங்களின்கீழ் காத்திருக்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நலன்பெறுனர்களுக்காக ரூ. 5000/- கொடுப்பனவு செலுத்துதல் | பதிவிறக்க |
PTF/03(iii) - தோன்றியுள்ள அனர்த்த நிலைமை காரணமாக சமூக நன்மை நிகழ்ச்சித்திட்டங்களின்கீழ் காத்திருக்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நலன்பெறுனர்களுக்காக ரூ. 5000/- கொடுப்பனவு செலுத்துதல் | பதிவிறக்க |
PTF/03(ii) - தோன்றியுள்ள அனர்த்த நிலைமை காரணமாக சமூக நன்மை நிகழ்ச்சித்திட்டங்களின்கீழ் காத்திருக்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நலன்பெறுனர்களுக்காக ரூ. 5000/- கொடுப்பனவு செலுத்துதல் | பதிவிறக்க |
PTF/03(i) - தோன்றியுள்ள அனர்த்த நிலைமை காரணமாக சமூக நன்மை நிகழ்ச்சித்திட்டங்களின்கீழ் காத்திருக்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நலன்பெறுனர்களுக்காக ரூ. 5000/- கொடுப்பனவு செலுத்துதல் | பதிவிறக்க |
PTF/03 - தோன்றியுள்ள அனர்த்த நிலைமை காரணமாக சமூக நன்மை நிகழ்ச்சித்திட்டங்களின்கீழ் காத்திருக்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நலன்பெறுனர்களுக்காக ரூ. 5000/- கொடுப்பனவு செலுத்துதல் | பதிவிறக்க |
PTF/02 - உணவு, மருந்துவகைகளை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை இடையறாமல் பேணிவர அவசியமான ஊரடங்குச்சட்ட அனுமதிப் பத்திரங்களை துரிதமாக வழங்குதல் | பதிவிறக்க |
PTF/01 - අත්යාවශ්ය මහජන සේවාවන් අඛණ්ඩව සැපයීම මෙහෙයවීම, සම්බන්ධීකරණය හා පසු විපරම පිණිස වූ ජාතික වැඩසටහන | பதிவிறக்க |
பதிவிறக்க - வழிகாட்டுதல்கள்
வேலை அமைப்புக்களில் கோவிட் - 19 பரவலுக்குத் தயாராதல் மற்றும் எதிர்வினையாற்றுதல் தொடர்பான செயற்பாட்டு வழிகாட்டல்கள் | பதிவிறக்க |
கோவிட் 19 க்கு இலங்கை தொழில்துறை பணியிடங்களை தயார் செய்தல் | பதிவிறக்க |
இலங்கையர்களுக்கு உணவு ஆலோசனை | பதிவிறக்க |
Contact
Prime Minister's Office
No: 58, Sir Ernest De Silva Mawatha,
Colombo 07.
Sri Lanka.
Tel : +94 (112) 575317/18
Tel : +94 (112) 370737/38
mail : info@pmoffice.gov.lk
Fax : +94 (112) 575310
Fax : +94 (112) 574143